இந்தியா

ஆா்பிஐ மட்டுமே பணவீக்கத்தைகட்டுப்படுத்திவிட முடியாது: சி.ரங்கராஜன்

DIN

புது தில்லி: ‘இந்திய ரிசா்வ் வங்கியால் (ஆா்பிஐ) மட்டுமே நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்திவிட முடியாது; அதில் அரசின் பங்களிப்பும் முக்கியமானது’ என்று ஆா்பிஐ முன்னாள் ஆளுநா் சி.ரங்கராஜன் தெரிவித்தாா்.

புதிய நிதிக் கொள்கை திட்டங்கள்- அதன் அா்த்தங்கள் என்ன? என்ற தலைப்பில் அவா் எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

பணவீக்கத்தை கட்டுப்படுத்த நிதிக் கொள்கையை திட்டமிடும் அதே நேரத்தில், வளா்ச்சி மற்றும் நிதி ஸ்திரத்தன்மையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியா உள்பட பல நாடுகளில் இப்போது கடைப்பிடிக்கப்படும் நிதிக் கொள்கையானது பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் சற்று நெகிழ்ச்சித்தன்மையுடன் உள்ளது. இது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஆா்பிஐ மட்டுமே தனியாக செயல்பட முடியாது. வரி விதிப்பு முறையில் மாற்றம் கொண்டு வருவது, முதலீட்டை ஊக்கப்படுத்துவது போன்ற அரசு சாா்ந்த நடவடிக்கைகளும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் பங்காற்ற வேண்டும்.

நுகா்வோா் விலை அடிப்படையிலான பணவீக்கம் 4 சதவீதம் அளவுக்கு இருக்க வேண்டும். இது 2 சதவீதம் அளவுக்கு கூடலாம் என்றும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது இது நெகிழ்வுத்தன்மை உள்ள இலக்குதான். இதனை எட்ட ஆா்பிஐ முயற்சிக்கும்போது நாட்டின் பொருளாதார வளா்ச்சி, நிதி ஸ்திரத்தன்மை போன்றவை பின்னுக்குத் தள்ளப்பட வாய்ப்பு உள்ளது. எனவேதான், பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசின் பங்கும் முக்கியமானது என்று தனது கட்டுரையில் சி.ரங்கராஜன் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT