முகப்பு
இந்தியா

நமஸ்தே... என்று கூறி உரையைத் தொடங்கிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள மொடேரா மைதானத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் 'நமஸ்தே' என்று கூறி தனது உரையைத் தொடங்கினார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:58 PM
பகிர்:


ஆமதாபாத்: குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள மொடேரா மைதானத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் 'நமஸ்தே' என்று கூறி தனது உரையைத் தொடங்கினார்.

பலத்த கைத்தட்டலுக்கு இடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது உரையை ஆற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, இந்தியாவுக்காக இரவு பகல் பாராமல் உழைப்பவர் பிரதமர் மோடி. இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக  அமெரிக்கா திகழும். பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் பெருமை மட்டுமல்ல, கடின உழைப்பு, விடா முயற்சி, பக்திக்கும் உதாரணமாக திகழ்கிறார்.

மகாத்மா காந்தியின் ஆசிரமத்துக்குச் சென்று வந்ததை மிகப் பெருமையாகக் கருதுகிறோம். 

இந்தியா சுவாமி விவேகானந்தர், சச்சின்,  விராட் கோலி போன்றவர்களையும் உலகுக்குத் தந்துள்ளது. இந்த உலகில் உள்ள மக்கள் பாலிவுட் பாடங்களை பார்த்து மகிழ்ச்சியடைகிறார்கள். ஷோலே, தில்வாலே துல்லேனியா லே ஜாயேங்கே உள்ளிட்டப் படங்களை உலக மக்கள் விரும்பிப் பார்த்தார்கள். சச்சின், விராட் போன்ற வீரர்களால் நீங்கள் உற்சாகம் அடைகிறீர்கள்.

இந்தியர்கள் தாங்கள் விரும்பும் எதையும் அடைந்துவிடுவார்கள். அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை தற்போது குறைந்துள்ளது. பயங்கரவாதிகளுக்கும் பயங்கரவாதத்துக்கும் எதிராக இந்தியாவுடன் இணைந்து அமரிக்கா செயல்படும் என்று கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.