முகப்பு
இந்தியா

சபர்மதி ஆசிரமத்துக்கு வருகை தந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகை தந்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:58 PM
பகிர்:

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகை தந்தார்.

1917ம் ஆண்டு ஜூன் மாதம் 17ம் தேதி முதல் மகாத்மா காந்தியடிகளின் இந்த சபர்மதி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது.

சபர்மதி ஆசிரமத்துக்கு வருகை தந்த டொனால்ட் டிரம்ப்புக்கும், அவரது மனைவி மெலனியாவுக்கும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

சபர்மதி ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருக்கும் மகாத்மா காந்தியடிகளின் புகைப்படத்துக்கு இரு தலைவர்களும் மரியாதை செலுத்தினர். பின்னர், ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருக்கும் சிறப்பான பல்வேறு பொருட்கள் மற்றும் விஷயங்கள் குறித்து டொனால்ட் டிரம்புக்கு பிரதமர் மோடி விளக்கினார்.

டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலனியா, பிரதமர் மோடியுடன் சபர்மரி ஆசிரமத்தை சுற்றிப் பார்த்தனர்.

முன்னதாக, 

ஆமதாபாத் விமான நிலையம் வந்தடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை ஆரத்தழுவி வரவேற்றார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்திய மண்ணில் வந்திறங்கிய அமெரிக்க அதிபருக்கு இந்திய பாரம்பரிய முறைப்படி மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

டிரம்ப், அவரது மனைவி மெலனியா, மகள் இவாங்கா உள்ளிட்டோரை பிரதமர் மோடி மற்றும் முக்கிய அமைச்சர்களும், அதிகாரிகளும் வரவேற்றனர். இசைக் கருவிகள் முழங்க, பல்வேறு கலாச்சார நடன நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் அமெரிக்க அதிபருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகளையும் இசை வாத்தியங்களையும் கண்டு டொனால்ட் டிரம்ப் மெய்மறந்து போனார்.

ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து தனித்தனி வாகனத்தின் மூலம் தலைவர்கள் சபர்மதி ஆசிரமம் புறப்பட்டுச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.