முகப்பு
இந்தியா

தில்லி வன்முறை: சிறப்புக் காவல் ஆணையர் நியமனம், பள்ளிகளுக்கு விடுமுறை

வடகிழக்கு தில்லி பகுதியில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக சட்டம் ஒழுங்கை கவனிக்க சிறப்பு காவல் ஆணையராக ஐபிஎஸ் அலுவலர் எஸ்என் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:59 PM
பகிர்:


வடகிழக்கு தில்லி பகுதியில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக சட்டம் ஒழுங்கை கவனிக்க சிறப்பு காவல் ஆணையராக ஐபிஎஸ் அலுவலர் எஸ்என் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார்.

வடகிழக்கு தில்லி பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிரான மற்றும் ஆதரவான பிரிவினருக்கிடையிலான மோதல் வன்முறையில் முடிவடைந்துள்ளது. இதன் காரணமாக நேற்று (திங்கள்கிழமை) தலைமைக் காவலர் உட்பட 5 பேரும், இன்று (செவ்வாய்கிழமை) 6 பேரும் உயிரிழந்துள்ளனர். 150 பேர் காயமடைந்து ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தில்லியில் சட்டம் ஒழுங்கை கவனிப்பதற்கான சிறப்பு காவல் ஆணையராக ஐபிஎஸ் அலுவலர் எஸ்என் ஸ்ரீவஸ்தவா இன்று (செவ்வாய்கிழமை) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உடனடியாகப் பொறுப்பேற்றுக் கொள்கிறார்.

அதேசமயம், தில்லியில் நிலவி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களான வடகிழக்கு தில்லி பகுதியில் நாளை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவிக்கையில், "வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை. அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளைய பொதுத் தேர்வுகளை ஒத்திவைக்குமாறு சிபிஎஸ்இ-யிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →