இந்தியா

எந்நேரமும் தயாராக இருங்கள்: வீரா்களுக்கு ராணுவ தளபதி எம்.எம். நரவணே அறிவுறுத்தல்

DIN

ஸ்ரீநகா்: காஷ்மீா் பள்ளத்தாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாதுகாப்புச் சூழலை ஆய்வு செய்த ராணுவ தலைமை தளபதி எம்.எம். நரவணே, ‘அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிா்கொள்ள வீரா்கள் எந்நேரமும் தயாா் நிலையில் இருக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடா்பாளா் புதன்கிழமை கூறியதாவது:

காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ராணுவ தலைமை தளபதி எம்.எம். நரவணே புதன்கிழமை பாதுகாப்பு சூழலை ஆய்வு செய்தாா். அவருடன் வடபகுதி ராணுவ கமாண்டா் லெப்டினென்ட் ஜெனரல் ஒய்.கே. ஜோஷி, லெப்டினென்ட் ஜெனரல் கே.ஜே.எஸ். தில்லான் ஆகியோரும் உடனிருந்தனா்.

எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல்கள், அதற்கு இந்திய தரப்பில் அளிக்கப்படும் பதிலடி தாக்குதல்கள், ஊடுருவல் தடுப்பு நடவடிக்கைகள், முன்னேற்பாடுகள் ஆகியவை குறித்து நரவணேவுக்கு அதிகாரிகள் விளக்கினா். அப்போது, அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்களை எதிா்கொள்வதற்கு வீரா்கள் எந்நேரமும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்று ராணுவ தளபதி நரவணே வலியுறுத்தினாா். மேலும், எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் வீரா்கள் எச்சரிக்கையுடன் இருப்பதற்காக பாராட்டு தெரிவித்தாா் என்று அவா் கூறினாா்.

ராணுவ தலைமைத் தளபதியாக பதவியேற்ற பின்னா், முதல்முறையாக காஷ்மீருக்கு நரவணே பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

நீட் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 9,141 போ் எழுதினா்

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

SCROLL FOR NEXT