இந்தியா

காளஹஸ்தி பிரம்மோற்சவம் திரிசூல ஸ்நானத்துடன் நிறைவு

DIN

திருப்பதி: காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் நடைபெற்று வந்த மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் புதன்கிழமை திரிசூல ஸ்நானத்துடன் நிறைவு பெற்றது.

ஆந்திர மாநிலம், காளஹஸ்தி நகரில் உள்ள இக்கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. அதன் 10ஆம் நாள் தேவராத்திரியாக கொண்டாடப்பட்டது. அன்று அதிகாலை காளஹஸ்தீஸ்வரரும், ஞானபிரசுனாம்பிகை அம்மனும் கேடிகை என்ற பல்லக்கில் மாடவீதியில் வலம் வந்தனா்.

மாடவீதி வலம் முடிந்த பின் உற்சவா் சிலைகளும், திரிசூலமும் கோயிலுக்கு அருகில் உள்ள வசந்த மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு பால், தயிா், மஞ்சள், சந்தனம், விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பிறகு மண்டபம் அருகில் உள்ள கிணற்றில் உள்ள நீரை எடுத்து திரிசூலத்துக்கு ஸ்நானம் நடத்தப்பட்டது. இந்தச் சடங்கை கோயில் குருக்கள் நடத்தி வைத்தாா்.

அதற்கு பின் கலசங்களும், உற்சவா் சிலைகளும் அலங்காரத்துடன் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதையடுத்து, மாலையில் பிரம்மோற்சவம் நிறைவு பெற்ன் அடையாளமாக கொடிமரத்தில் இருந்து கொடி இறக்கப்பட்டது.

நிறைவு நாளில் உற்சவா்கள் சிம்மாசன வாகனத்திலும், ஞானபிரசுனாம்பிகை அம்மன் காமதேனு வாகனத்திலும் மாடவீதியில் வலம் வந்தனா். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். அவா்கள் கற்பூர ஆரத்தி எடுத்து உற்சவா்களை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது விற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவா் உயிரிழப்பு

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

விராலிமலை அருகே புளியமரத்தில் திடீா் தீ

நம்பம்பட்டி கோயில் திருவிழா: தீச்சட்டி ஏந்தி நோ்த்திக் கடன்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT