தில்லி வன்முறைக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி தான் காரணம்: பிரகாஷ் ஜாவடேகர்
வடகிழக்கு தில்லிப் பகுதியில் ஏற்பட்ட வன்முறைகளுக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள்தான் காரணம் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
புது தில்லி: வடகிழக்கு தில்லிப் பகுதியில் ஏற்பட்ட வன்முறைகளுக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள்தான் காரணம் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ் ஜாவடேகர், கையில் ஆயுதங்களுடன் ஆம் ஆத்மி கவுன்சிலர் வன்முறையில் ஈடுபடும் விடியோ கிடைத்திருக்கிறது.
சிஏஏ போராட்டங்களை தூண்டும் வகையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல், பிரியங்கா ஆகியோர் செயல்பட்டு வருகிறார்கள் என்றும் கூறினார்.
முன்னதாக, தில்லியில் நிகழ்ந்த வன்முறையின் பின்னணியில் நன்கு திட்டமிடப்பட்ட சதி உள்ளதாகவும், வன்முறைச் சம்பவங்களுக்கு பொறுப்பேற்று, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி கூறியிருந்தார்.
இந்த நிலையில், தில்லி வன்முறைக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மியே காரணம் என்று மத்திய அமைச்சர் இன்று குற்றம்சாட்டியுள்ளார்.