ஆந்திரத்தில் மூன்று தலைநகர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுடன் சந்திரபாபு நாயுடு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆந்திரத்திற்கு நிர்வாகத் தலைநகராக விசாகப்பட்டினமும் நீதிமன்றத் தலைநகராக கர்னூலும் சட்டப்பேரவைத் தலைநகராக அமராவதியும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, அம்மாநிலத்தை சேர்ந்த எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திரத்தின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு அமராவதியில் விவசாயிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆந்திரத்தில் மூன்று தலைநகர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் சந்திரபாபு நாயுடுவின் மனைவியும் கலந்துகொண்டார்.
கூட்டத்தில் பேசிய அவர், 'ஜெகன் மோகன் அரசின் மூன்று தலைநகர் அறிவிப்பு மாநிலத்தை மொத்த குழப்பத்தில் தள்ளியுள்ளது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் இணைந்து அமராவதியை காப்போம்' என்று கூறினார்.
மேலும், விசாகப்பட்டினத்திற்கு தலைநகரை மாற்றுவதற்கான திட்டத்தை மாநில அரசு கைவிட வேண்டும் என்று கூறி குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.