முகப்பு
இந்தியா

கேரளத்தில் பேருந்து - கார் மோதல்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

கேரளத்தில் வைக்கோம் - செர்தலா வழித்தடத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

இந்தியா

கேரளத்தில் பேருந்து - கார் மோதல்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

கேரளத்தில் வைக்கோம் - செர்தலா வழித்தடத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:24 PM
பகிர்:

கேரளத்தில் வைக்கோம்-செர்தலா வழித்தடத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

கேரளத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.45 மணியளவில் வைகோம்  சேரம்சுவாடு பகுதிக்கு அருகே வேகமாக வந்த பேருந்து ஒன்று எதிரே வந்த காரில் மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த இரண்டு பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

விபத்தில் உயிரிழந்த சூர்ராஜ், அவரது தந்தை விஸ்வநாதன், தாய் கிரிஜா மற்றும் அஜிதா ஆகிய நான்கு பேரும் எர்ணாகுளத்தில் உள்ள உதயம்பேரூரைச் சேர்ந்தவர்கள் என போலீஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நிகழ்ந்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், விபத்து தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →