காஷ்மீர் நிலைமையை ஆராய 15 நாட்டுத் தூதர்கள் ஸ்ரீநகர் வருகை
காஷ்மீரில் தற்போது நிலவும் சூழ்நிலையை ஆராய இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஐ ஜஸ்டர் உட்பட 15 நாடுகளின் தூதர்கள் இன்று ஸ்ரீநகர் வந்துள்ளனர்.
ஸ்ரீநகர்: காஷ்மீரில் தற்போது நிலவும் சூழ்நிலையை ஆராய இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஐ ஜஸ்டர் உட்பட 15 நாடுகளின் தூதர்கள் இன்று ஸ்ரீநகர் வந்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அங்கு ஊரடங்கு உட்பட பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டன.
இந்த நிலையில், காஷ்மீரில் தற்போது நிலவும் சூழ்நிலைகள் குறித்து ஆராய, அமெரிக்கா உட்பட 15 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் இன்று புது தில்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ஸ்ரீநகர் வந்தடைந்தனர்.
Advertisement
ஸ்ரீநகர் வந்த தூதர்களை, புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகள் வரவேற்றனர். 15 தூதர்களும் இன்று ஜம்மு சென்று அங்கு நிலைமைகளை ஆராய்ந்து இன்று இரவு அங்கு அங்கியிருப்பார்கள்.
இவர்கள் இரண்டு நாட்கள் காஷ்மீரில் தங்கியிருந்து ஆளுநர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.