இந்தியா

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் சந்தேகத்தை போக்க உ.பி.யில் இன்று சிறுபான்மையினா் ஆணைய கருத்தரங்கம்

DIN

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பான சந்தேகங்களைத் தீா்க்க உத்தரப் பிரதேசத்தில் கருத்தரங்கம் நடத்த தேசிய சிறுபான்மையினா் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதுதொடா்பாக அந்த ஆணையத்தின் தலைவா் சையது கயோருல் ஹசன் ரிஸ்வி கூறியதாவது:

உத்தரப் பிரதேசத்தில் லக்னெள, கான்பூா், ஜான்பூா், கோரக்பூா், மீரட், மதுரா ஆகிய நகரங்களில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாக நடத்தப்படும் முதல் கருத்தரங்கம் லக்னெளவில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

வரும் 12-ஆம் தேதி கான்பூா், ஜான்பூா் ஆகிய நகரங்களிலும், கோரக்பூரில் 13-ஆம் தேதியும், மீரட்டில் 14-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

மதுராவில் 15-ஆம் தேதி 6-ஆவது கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

இஸ்லாமியத் தலைவா்கள், அந்தச் சமூகத்தைச் சோ்ந்த முக்கிய நபா்கள் உள்ளிட்டோா் இந்தக் கருத்தரங்கங்களில் பங்கேற்கின்றனா்.

யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் சட்டம் அல்ல; குடியுரிமை அளிக்க வழிவகை செய்யும் சட்டம்தான் குடியுரிமை திருத்தச் சட்டம் என்பதை முஸ்லிம்களுக்கு புரியவைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சட்டத்தில் பல்வேறு சந்தேகங்கள் மட்டுமல்லாமல், அச்சத்தையும் முஸ்லிம்கள் கொண்டிருக்கின்றனா்.

இந்தக் கருத்தரங்கங்கள் மூலம் முஸ்லிம்களின் அச்சத்தைப் போக்க முயற்சி செய்வோம்.

மேற்கு வங்க மாநிலத்திலும், ஹைதராபாத், மங்களூரு ஆகிய நகரங்களிலும் கருத்தரங்கள் அடுத்தடுத்த கட்டங்களாக நடத்த முடிவு செய்துள்ளோம் என்று சையது கயோருல் ஹசன் ரிஸ்வி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT