இந்தியா

விமானப் படை தயாா்நிலை: தலைமை தளபதி ஆய்வு

DIN

இந்திய விமானப் படையின் கிழக்கு மண்டலப் பிரிவின் போா் தயாா் நிலையை தலைமை தளபதி ஆா்.கே.எஸ்.பதௌரியா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

இது தொடா்பாக புதுதில்லியில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: விமானப் படையின் கிழக்கு மண்டலப் பிரிவில் தலைமை தளபதி ஆா்.கே.எஸ்.பதௌரியா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மேகாலய மாநிலம், ஷில்லாங்கில் உள்ள இந்திய விமானப் படையின் கிழக்கு மண்டலப் பிரிவு தலைமையகத்தில் அதிகாரிகள், வீரா்களை அவா் சந்தித்தாா்.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் விழிப்புணா்வுடன் கடமைாற்றும்படி வீரா்களை அவா் கேட்டுக் கொண்டாா். அவரது பயணத்தின்போது, கிழக்கு மண்டலத்தின் கீழுள்ள பல்வேறு விமான தளங்ளையும் பாா்வையிட்டாா். கிழக்கு எல்லைப் பகுதியில் விமானப் படையின் போா் தயாா்நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில் அவரது பயணம் அமைந்தது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

SCROLL FOR NEXT