முகப்பு
இந்தியா

குடியுரிமைச் சட்டம் பற்றி எதிர்க்கட்சிகளின் பொய்ப் பிரசாரத்தால்தான் நாட்டில் குழப்பம் : அமித் ஷா

குடியுரிமைத் திருத்தச் சட்டம் பற்றி எதிர்க்கட்சிகள் செய்த பொய்ப் பிரசாரத்தால்தான் நாட்டில் குழப்பம் ஏற்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:27 PM
பகிர்:


காந்திநகர்: குடியுரிமைத் திருத்தச் சட்டம் பற்றி எதிர்க்கட்சிகள் செய்த பொய்ப் பிரசாரத்தால்தான் நாட்டில் குழப்பம் ஏற்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

காந்திநகரில் குஜராத் காவல்துறைக்கான பல்வேறு திட்டங்களின் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது நாட்டு மக்களுக்கு குடியுரிமையை ஏற்படுத்துவதற்காகத்தானே ஒழிய, குடியுரிமையை பறிப்பதற்காக அல்ல என்றும் அமித் ஷா குறிப்பிட்டார்.

மேலும் அவர்  பேசுகையில், குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து பாஜக தொண்டர்கள், வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சிகள் கையில் எடுக்க வேறு எந்த பிரச்னையும் இல்லை. அதனால்தான் அவர்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டம் பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். அவர்களது பொய்யான பிரசாரத்தால்தான் நாடு முழுவதும் குழப்பம் நிலவி வருகிறது என்றும் அவர் கூறினார்.

பொதுமக்களுக்கு உண்மையைப் புரியவைக்கும் ஆற்றல் நமக்கு உள்ளது. ஒவ்வொரு பாஜக தொண்டரையும் நான் வலியுறுத்துவது இதைத்தான், ஒவ்வொரு வீடாகச் சென்று குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் பயன்கள் குறித்து எடுத்துச் சொல்லுங்கள். நமது விழிப்புணர்வு பிரசாரம் முடிவடைந்துவிட்டால், நாட்டு மக்களுக்கு இதன் முக்கியத்துவம் புரிந்துவிடும் என்று அமித் ஷா கூறினார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →