லக்னெளவில் ஆசிட் தாக்குதலுக்கு ஆளான 14 வயது சிறுமி
உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னெளவில் கைசர்பாக் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் ஆசிட் தாக்குதலுக்கு ஆளானார்.
இந்தியாலக்னெளவில் ஆசிட் தாக்குதலுக்கு ஆளான 14 வயது சிறுமி
உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னெளவில் கைசர்பாக் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் ஆசிட் தாக்குதலுக்கு ஆளானார்.
உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னெளவில் கைசர்பாக் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் ஆசிட் தாக்குதலுக்கு ஆளானார். சிறுமியின் முகம் மற்றும் கைகளில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், தீவிர சிகிச்சை அளித்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஆஷா சோங்கர் மற்றும் அவரது கணவர் முகேஷ் சோன்கர் ஆகியோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் தெரிவிக்கும்போது, 'ஆஷா சோன்கர் என்ற பெண்மணி நகைக்கடை உரிமையாளர் ஒருவரிடம் வாக்குவாதம் ஏற்பட்டபோது, திடீரென தன்னிடம் இருந்த ஆசிட்டை எறிந்தார். உடனே அருகே இருந்த 3 பெண்களின் மேல்பட்டு அவர்கள் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவரான குங்குன் சோன்கர், பலத்த காயமடைந்து சிகிச்சை பிரிவில் உள்ளார். செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தனர்.