முகப்பு
தமிழ்நாடு

தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன்

திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து செங்கோட்டையன் விமர்சனம்...

Updated On : 5 மார்ச், 2026 at 12:10 PM
செங்கோட்டையன் (கோப்புப்படம்) - ANI
பகிர்:

தவெகவை காட்டி திமுகவிடம் காங்கிரஸ் கட்சியினர் கூடுதல் தொகுதிகளை பெற்றுள்ளதாக தவெக தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தையை தீவிரமாக நடத்திய காங்கிரஸ், நேற்றிரவு திமுகவுடன் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தை இறுதி செய்தது.

காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த தவெக ஏமாற்றம் அடைந்தது.

Advertisement

இதுகுறித்து செய்தியாளர்களுடன் செங்கோட்டையன் பேசியதாவது:

“தமிழக வெற்றிக் கழகத்தால் காங்கிரஸுக்கு பலன் கிடைத்துள்ளது. தவெகவுடன் சென்றுவிடுவோம் எனக் கூறி கூடுதல் சீட்டுகளை பெற்றுள்ளார்கள். ஒவ்வொரு கட்சியும் எங்களை காட்டி கூடுதல் சீட் பெறும் நிலைமை உருவாகியுள்ளது.

ஆட்சியில் பங்கு என்று தவெக அறிவித்ததால்தான் மற்ற கூட்டணியிலும் பங்கு கேட்க தொடங்கியிருக்கிறார்கள்.

ஜெயக்குமார் தவெகவுக்கு வர வாய்ப்புள்ளது. அவருக்கு அதிமுகவில் சீட் கிடைக்கப் போவதில்லை. அவரது மகனுக்கு வேண்டுமானால் சீட் கிடைக்கலாம். தனித்து நின்று முதல்வராகவே விஜய் இருக்கிறார். 18 வயது முதல் 45 வயது வரை இருக்கின்ற அனைவரின் மனநிலையையும் புரிந்துகொண்டு விமர்சிக்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.

summary

TVK Sengottaiyan about DMK - Congress Alliance and ADMK Jayakumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.