முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்த நான் துரோகி: இபிஎஸ் மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு

முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்த தன்னை கட்சியிலிருந்து இபிஎஸ் நீக்கியதாக செங்கோட்டையன் குற்றச்சாட்டு

Updated On : 9 ஏப்ரல் 2026, 5:29 pm IST
எடப்பாடி பழனிசாமியுடன் செங்கோட்டையன் - கோப்புப் படம்
பகிர்:

தவெக தலைவர் விஜய் ஆதரவுடன் முதல்வராகி பணம் சம்பாதிக்க எடப்பாடி பழனிசாமி முயன்றதாக செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தவெக பிரசாரத்தில் செங்கோட்டையன் பேசுகையில், "அதிமுகவிலிருந்து என்னை நீக்கியதுடன், என்னை துரோகி என்றும் இபிஎஸ் அழைக்கிறார். அதுமட்டுமின்றி, என் மீது இபிஎஸ் கொலை வெறியில் உள்ளார்.

இதற்குக் காரணம், தவெகவை அதிமுகவுடன் இணைத்து முதல்வராகி விடலாம் என்று இபிஎஸ் நினைத்தார். விஜய் ஆதரவுடன் ரூ. 5,000 கோடி சம்பாதிக்கவும் திட்டமிட்டார்.

Advertisement

Advertisement

ஆனால், விஜய் மட்டுமே முதல்வர் வேட்பாளர்; வேறு யாரும் இல்லை என நான் தெரிவித்ததால்தான்.

முதல்வர், பொதுச் செயலாளர் பதவியை விட்டுக்கொடுத்த எனக்கு கிடைத்த பரிசு, துரோகி. எனக்குப் பின் கட்சியில் சேர்ந்து பொதுச்செயலாளரானவர், கட்சிக்காக உழைத்தவர்களை நீக்கி வருகிறார்.

கட்சியைவிட்டு நீக்கப்பட்டபிறகு, கிளைச்செயலாளர் ஒருவர் வீட்டின் துக்க நிகழ்வுக்கு நான் சென்றதால், அவரையும் கட்சியைவிட்டு நீக்கி விட்டனர்.

10 முறை தோல்வியைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியால், திமுகவை வீழ்த்த முடியாது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறகு, திமுகவை வீழ்த்த விஜய் ஒருவரால் மட்டுமே முடியும்" என்று தெரிவித்தார்.

summary

TVK Leader Sengottaiyan Alleges Edappadi Palaniswami Planned to Make Money Through Vijay's Support

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.