மேக்கேதாட்டு அணை விவகாரம்: கர்நாடக காங்கிரஸை எதிர்த்து பேச முடியுமா? தவெக அரசுக்கு இபிஎஸ் கேள்வி
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசை எதிர்த்து தவெக அரசு பேசுமா? என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசை எதிர்த்து தவெக அரசு பேசுமா? என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "மேக்கேதாட்டு அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
காவிரியில் தமிழகத்தின் உரிமையை மழுங்கடிக்கும் வகையில் கர்நாடக காங்கிரஸ் அரசு செயல்படுவதும், அதை தமிழகத்தில் உள்ள அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பதும், ஆட்சி மாறினும் மாறாத காட்சியாகவே உள்ளது.
Advertisement
Advertisement
தமிழ்நாட்டை தற்போது ஆண்டுவரும் அரசு காங்கிரஸ் தயவில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் பொய்க்கால் குதிரை அரசாக செயல்படுவதால், கர்நாடக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து திடமான நிலைப்பாடு எடுத்து பேச முடியுமா?
மேக்கேதாட்டுவில் பூமி பூஜை வரை பேசுவதற்கு கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எங்கிருந்து தைரியம் வருகிறது ? தங்களால் ஆட்டுவிக்கப்படும் அரசுதான் தமிழ்நாட்டில் உள்ளது என்ற எண்ணமா ?
காங்கிரஸ் தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராக செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது. காவிரி நதிநீர் என்பது தமிழ்நாட்டின் ஜீவாதாரம் ஆகும். டெல்டா உள்ளிட்ட பல மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரியாறு விளங்கி வருகிறது.
மேக்கேதாட்டுவில், காவிரியின் குறுக்கே அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும்.
காவிரி தொடர்பாக தமிழகத்தின் உரிமை விட்டுக்கொடுக்கப்படுவதை அதிமுக ஒருநாளும் அனுமதிக்காது.
கர்நாடக துணை முதல்வரின் இப்பேச்சு தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்த அரசு உடனடியாக எடுப்பதுடன், அரசின் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
AIADMK Leader Edappadi Palaniswami questions whether the TVK government will speak out against the Karnataka Congress government regarding the Mekedatu dam issue.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.