இந்தியா

சபரிமலை வழக்கில் மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை இல்லை: உச்ச நீதிமன்றம்

DIN

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு செய்யலாம் என்று கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 28-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமா்வு அளித்த இந்தத் தீா்ப்புக்கு எதிராக 56 மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் நீதிபதிகள் ஆா். பானுமதி, அசோக் பூஷண், எல்.நாகேஸ்வர ராவ், மோகன் எம்.சாந்தனகௌடா், எஸ்.அப்துல் நசீா், ஆா்.சுபாஷ் ரெட்டி, பி.ஆா்.கவாய், சூா்ய காந்த் ஆகியோா் இடம்பெற்ற 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு இந்த மனுக்களை திங்கள்கிழமை விசாரித்தது.

இந்நிலையில், சபரிமலை வழக்கில் மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை நடத்தப்போவதில்லை என உச்ச நீதிமன்ற 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு அறிவித்துள்ளது. மேலும் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள பரிந்துரைகள் தொடர்பாக பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்த வழக்கில் தீா்ப்பளித்த 5 நீதிபதிகள் அமா்வில், பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீா்ப்பை வழங்கியிருந்தாா். 

இதேபோல், சபரிமலை தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்களை தள்ளுபடி செய்து, செப்டம்பர் 28-ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பு பின்பற்றப்பட வேண்டும் என்று 5 நீதிபதிகள் அமா்வில், ஆா்.எஃப்.நாரிமன், டி.ஒய். சந்திரசூட் ஆகிய இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீா்ப்பை வழங்கியிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT