இந்தியா

குற்றவாளிகளை எப்படி மன்னிக்க முடியும்? நிர்பயா தாய் ஆஷா தேவி

நிர்பயாவை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிகளை எப்படி மன்னிக்க முடியும் என்று அவரது தாய் ஆஷா தேவி கேள்வி எழுப்பியுள்ளார்.

ANI


நிர்பயாவை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிகளை எப்படி மன்னிக்க முடியும் என்று அவரது தாய் ஆஷா தேவி கேள்வி எழுப்பியுள்ளார்.

நிர்பயா குற்றவாளிகள் நால்வரையும் பிப்ரவரி 1ம் தேதி 6 மணிக்கு தூக்கிலிட  தில்லி நீதிமன்றம் நேற்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் வழியைப் பின்பற்றி, அவர் தனது கணவரைக் கொன்ற குற்றவாளிகளை எவ்வாறு மன்னித்தாரோ அதுபோல, நிர்பயா குற்றவாளிகளை மன்னித்துவிடலாம் என்று மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங், ஆஷா தேவிக்கு யோசனை கூறியிருந்தார்.

இந்த யோசனை குறித்து அறிந்த ஆஷா தேவி, தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

எனக்கு இதுபோன்ற ஒரு யோசனையைக் கூற இந்திரா ஜெய்சிங் யார்? நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்றுதான் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் நினைக்கிறார்கள். ஆனால், இவரைப் போன்ற ஒரு சிலரால்தான், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு சட்டம் மூலம் நியாயம் கிடைக்காமல் போகிறது என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே, நிர்பயா விவகாரத்தில் சிலர் அரசியல் செய்கிறார்கள் என்று ஆஷா தேவி நேற்று குற்றம்சாட்டியிருந்த நிலையில், இன்று இந்த கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடலுக்கு விஜய் அஞ்சலி!

இஸ்ரேலில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்

சமீரா, தீக்‌ஷனா பந்துவீச்சில் அசத்தல்..! சான்ட்னர் அதிரடியால் இலங்கைக்கு 169 ரன்கள் இலக்கு!

5 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த IndiGo பயணிகள்! பணியாளர்களுடன் வாக்குவாதம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மே.இ.தீவுகள் சிக்ஸர் மழை பொழியுமா? பயிற்சியாளர் பதில்!

SCROLL FOR NEXT