முகப்பு
இந்தியா

ஜம்மு காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர், ராணுவப்படையினர், காஷ்மீர் போலீஸார் இணைந்து நடத்திய தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:32 PM
Jammu Kashmir
பகிர்:

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர், ராணுவப்படையினர், காஷ்மீர் போலீஸார் இணைந்து நடத்திய தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து, அவர்கள் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. பின்னர், ராணுவப்படையினர் மற்றும் காஷ்மீர் போலீஸாரும் தாக்குதலில் இணைந்தனர்.

இறுதியில், இந்திய தரப்பில் மூன்று படையினரும் இணைந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர்கள் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் இருந்த தீவிரவாதிகள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். தாக்குதலை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →