இந்தியா

ஹிந்து மகாசபையின் பிரிவினைவாத அரசியலை எதிர்த்தவர் நேதாஜி: மம்தா

DIN


நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஹிந்து மகாசபையின் பிரிவினைவாத அரசியலை எதிர்த்து, மதச்சார்பற்ற மற்றும் ஒருங்கிணைந்த இந்தியாவுக்காகப் போராடினார் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்கில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்ஸின் பிறந்த நாள் விழா இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:

"ஹிந்து மகாசபையின் பிரிவினைவாத அரசியலை நேதாஜி எதிர்த்தார். அவர் மதச்சார்பற்ற இந்தியாவுக்காகப் போராடினார். தற்போது மதச்சார்பின்மையைப் பின்பற்றுபவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து நம்பிக்கைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்கிற செய்தியை சந்திரபோஸ் தன்னுடையப் போராட்டம் மூலம் நமக்கு அளித்துள்ளார். ஒருங்கிணைந்த இந்தியாவுக்காகப் போராடுவதே அவருக்கு நாம் செலுத்தும் சிறந்த மரியாதையாக இருக்கக் கூடும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT