இந்தியா

தில்லி தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

DIN

கடந்த 2015 தேர்தலை விட நடக்கவிருக்கும் 2020 தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 8ம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 21ம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில், கடந்த 2015 தேர்தலை விட நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வருகிற பிப்ரவரி 8ம் தேதி நடக்கவுள்ள தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட மொத்தம் 24 பெண் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் ஆம் ஆத்மி கட்சியினர் 9 பேர், காங்கிரஸ் 10 பேர், பாஜகவைச் சேர்ந்த 5 பேர் என மொத்தம் 24 பெண்கள் களத்தில் உள்ளனர்.

கடந்த 2015 தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 19 பெண்கள் போட்டியிட்டனர். காங்கிரஸ் -5, ஆம் ஆத்மி -6, பாஜக -8. காங்கிரஸ் கட்சியில் மட்டும் போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை கடந்த முறையை ஒப்பிடும் போது 50% குறைந்துள்ளது.

கைலாஷ் சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஷிகா ராய், 'சமூகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவர பெண் பிரதிநிதித்துவம் தேவை. இருப்பினும், தேர்தலில் பெண்கள் அதிகம் போட்டியிட வேண்டும. தகுதியானவர்களுக்கு கட்சி வாய்ப்பளித்து வருகிறது' என்று தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி பெண் வேட்பாளர் ஒருவர் பேசுகையில், 'பெண்கள் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றனர். அப்படி இருக்க அவர்கள் அரசியலுக்கு வருவது சாதாரணமான விஷயமல்ல. அரசியலுக்கு வரும் பட்சத்தில், அதிக நேரத்தை இதற்காக செலவழிக்க வேண்டும். எனினும் காலம் மாறிக்கொண்டிருக்கிறது. எனவே, எதிர்காலத்தில் அரசியலுக்கு அதிகமாக பெண்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்' என்றார்.

அதேபோன்று காங்கிரஸ் பெண் வேட்பாளர் அகங்க்சா, 'பெண்களிடையே மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம் பல்வேறு துறைகளில் பெண் பங்களிப்பை வலுப்படுத்த காங்கிரஸ் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. தற்போது அரசியல் உலகில் அதிகமான பெண்கள் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT