இந்தியா

ஷபனா ஆஸ்மிக்கு எதிரான கருத்து: இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்

IANS

நடிகர் ஷபானா ஆஸ்மி சமீபத்தில் ஒரு கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.  அவர் விரைவில் உடல்நலம் தேறி வர அவரது ரசிகர்களும் உறவினர்களும் பிரார்த்தி வரும் நிலையில், ஒருவர் அவரைக் குறித்து தொடர்ந்து எதிர் கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்.

தேசிய திரைப்பட விருது மற்றும் பிலிம்பேர் விருதை தலா ஐந்து முறை வென்ற மூத்த நடிகர் ஷபானா ஆஸ்மி, ஜனவரி 18 அன்று மும்பை-புனே நெடுஞ்சாலையில் கார் விபத்தில் காயமடைந்து தற்போது மருத்துவமனையில் உள்ளார்.

இதையடுத்து, நடிக்கைக்கு எதிராக சமூக ஊடகங்களில் ஆட்சேபகரமான கருத்து தெரிவித்ததாக கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு அரசு ஆசிரியர் செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தாத்ரி பகுதியில் உள்ள ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிகிறார். தற்போது அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கையின் பகுதியாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.

கெளதம் புத்தர் நகர் பேசிக் சிக்ஷா அதிகாரி (பி.எஸ்.ஏ) பால் முகுந்த் பிரசாத் இது குறித்து பேசுகையில், "அந்த ஆசிரியர் தனது பேஸ்புக் பதிவில் ஆட்சேபகரமான கருத்தை தெரிவித்துள்ளார். இந்த விஷயம் எங்கள் பார்வைக்கு வந்தது, அவரது கருத்து உத்தரபிரதேச அரசு ஊழியர்களுக்கான சேவை வழிகாட்டுதல்களை மீறுவதாகும்" என்று கூறினார்.

ஆசிரியர் காலவரையின்றி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், கல்வித் துறையால் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

75 வயதான அஸ்மி விரைவில் மரணமடைய வேண்டும் என்பது போன்ற பதிவுகளை எழுதினார் ஆசிரியர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT