இந்தியா

60 வயதான மூதாட்டியுடனான காதலைக் கைவிட மறுத்ததால், 22 வயது இளைஞர் மீது வழக்கு

PTI

60 வயதான மூதாட்டியுடனான காதலைக் கைவிட மறுத்ததால், 22 வயதான ஒரு இளைஞர் தாஜ்மஹால் நகரிலுள்ள எட்மாடுடாவுலா காவல் நிலையத்தில் "அப்பகுதியில் அமைதியைக் குலைத்ததற்காக" வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யபட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரகாஷ் நகரில் வசிக்கும் அந்தப் பெண்ணின் கணவரும் மகனும் வியாழக்கிழமை காவல் நிலையத்தை அடைந்து அந்த இளைஞனுக்கு எதிராக புகார் செய்தனர். அங்கேயே, இரு குடும்பங்களுக்கிடையில் காவல் நிலையத்தில் சண்டை ஏற்பட்டது. அந்த முதிய பெண்ணும் இளைஞனும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக அறிவித்து அதில் பிடிவாதமாக இருந்தனர்.

இதில் குறிப்பிடத்தக்கது, மூதாட்டி ஏழு குழந்தைகளுக்குத் தாய், அவர்களின் மூலம் பாட்டியும் ஆனவர். 

இவ்விவாகாரத்தில் இருவரின் குடும்ப உறுப்பினர்களும் தலையிட்டு காதலர்களை தங்கள் உறவை துண்டிக்கும்படி ஏற்கனவே கூறியிருந்தனர், ஆனால் இருவரும் பிடிவாதமாகத் தங்கள் உறவைத் தொடர்ந்துள்ளனர்.

காதலர்கள் மனம் மாறாத நிலையில், அப்பகுதியில் அமைதிக்கு இடையூறு விளைவித்ததற்காக 22 வயது இளைஞருக்கு எதிராக போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.

இந்த விசித்திர பிரச்னையால் அதிர்ச்சியடைந்த போலீஸார் அந்த முதிய பெண், இளைஞர் மற்றும் இரு சாராரின் குடும்பத்தினரை விசாரணைக்காக அழைத்தனர். பின்னர் வயது, சமூக அந்தஸ்து, குடும்பம் உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி எடுத்துறைத்து, இது பொருந்தாக் காதல் எனவே குடும்பத்தாருடன் அனுசரித்துச் செல்லுங்கள் என்று பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் மூதாட்டியும் இளைஞனும் எதையும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. தாங்கள் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளவிருப்பதாகப் போலீஸாரிடம் தெரிவித்தனர். 

இறுதியில் அந்த இளைஞன் மீது பொது அமைதிக்கு கெடுதல் விளைவித்ததாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அக்காதல் ஜோடியைக் கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT