முகப்பு
இந்தியா

மொபைல் போன் வாங்கித் தர மறுத்ததால் காவல் ஆய்வாளரின் 13 வயது மகன் தற்கொலை!

ஜார்கண்ட் மாநிலத்தில் மொபைல் போன் வாங்கித் தர மறுத்ததால் காவல் ஆய்வாளரின் 13 வயது மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Updated On : 1 ஜூலை, 2020 at 5:49 PM
ஜார்கண்ட் மாநிலத்தில் மொபைல் போன் வாங்கித் தர மறுத்தால் காவல் ஆய்வாளரின் 13 வயது மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பகிர்:

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் மொபைல் போன் வாங்கித் தர மறுத்ததால் காவல் ஆய்வாளரின் 13 வயது மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டம் சதர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் துமார்தியா ஜாரியா டொலி. இங்கு உதவி காவல் ஆய்வாளராகப் பணியாற்றும் ஜய்மங்கள் காரியா வசித்து வருகிறார். இவரது மகன் அலோக்(13). ஏழாம் வகுப்பு மாணவன்.

அலோக் தனது தந்தையிடம் கடந்த மூண்டு நாட்களாக ஆண்ட்ராய்ட் மொபைல் போன் வாங்கித் தரும்படி கேட்டுக் கொண்டே இருந்துள்ளான். ஆனால் போன் விலை அதிகம் என்பதால் கொஞ்சகாலம் பொறுத்திருக்கும்படி ஜய்மங்கள் காரியா மகனிடம் சொல்லியிருக்கிறார்.

Advertisement

ஆனால் தான் கேட்டபடி வாங்கித் தராவிட்டால் தற்கொலை செய்து கொல்லப்போவதாக அலோக் மிரட்டியிருக்கிறான். ஆனால் அவனது மிரட்டலை வீட்டில் யாரும் பெரிதாக் எடுத்துக் கொள்ளவில்லை.

இந்நிலையில் புதனன்று அலோக் வீட்டில் இருந்த பூச்சிகளை விரட்டப் பயன்படுத்தும் மாத்திரைகளை எடுத்துச் சாப்பிட்டு விட்டான். உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்தச் செல்லும் வழியில் அவன்  உயிரிழந்து விட்டான்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.