இந்தியா

கேரளத்தில் 160, கர்நாடகத்தில் 1,502 பேருக்கு கரோனா உறுதி

DIN


கேரளத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 160 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 1,502 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளம்:

கேரளத்தில் புதிதாக 160 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 106 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 40 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். 14 பேர் கேரளத்திலேயே நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2,088 ஆகியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 202 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 2,638 பேர் குணமடைந்துள்ளனர். அந்த மாநிலத்தில் மொத்தம் 123 ஹாட்ஸ்பாட்-கள் உள்ளன.

கர்நாடகம்:

கர்நாடகத்தில் புதிதாக 1,502 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 19 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 18,016 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 272 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் இன்று மேலும் 271 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,334 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 9,406 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் 161 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

இன்று அங்கு 16,210 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 6,53,627 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT