முகப்பு
இந்தியா

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் உமா பாரதி ஆஜர்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று முன்னாள் இணை அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான உமா பாரதி நேரில் ஆஜராகி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார்.

Updated On : 2 ஜூலை, 2020 at 2:58 PM
சிபிஐ நீதிமன்றத்தில் உமா பாரதி ஆஜர்
பகிர்:


லக்னௌ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று முன்னாள் இணை அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான உமா பாரதி நேரில் ஆஜராகி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 32 பேரின் வாக்குமூலத்தை சிஆர்பிசி பிரிவு 313-ன் கீழ் (குற்றம்சாட்டப்பட்டவர்களை விசாரிக்கும் நீதிமன்றத்தின் அதிகாரம்) நீதிமன்றம் விசாரித்து பதிவு செய்து வருகிறது.

சுமார் 27 ஆண்டு பழமையான வழக்கில், 19வது குற்றம்சாட்டப்பட்டவரான உமா பாரதி (61) இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

Advertisement

முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி உள்பட இன்னும் 13 குற்றம்சாட்டப்பட்டவர்கள், நீதிமன்றத்தில் ஆஜராக இன்னமும் வாக்குமூலம் அளிக்கவில்லை.

உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் சிபிஐ சிறப்பு நீதிமன்றம், பாபர் மசூதி இடிப்பு வழக்கை தினந்தோறும் விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.