திருநங்கைகளும் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ப்பு: ஒடிஸா அரசு முடிவு
சமூக நலத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டத்தில் திருநங்கைகளையும் சேர்ப்பதென்று ஒடிஸா அரசு முடிவு செய்துள்ளது.
புவனேஸ்வர்: சமூக நலத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டத்தில் திருநங்கைகளையும் சேர்ப்பதென்று ஒடிஸா அரசு முடிவு செய்துள்ளது.
ஒடிஸா அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான சமூகப் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத் துறை அமைச்சர் அசோக் சந்திர பாண்டா. அவர் வெள்ளியன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சமூக நலத்திட்டத்தின் கீழ் மாநில அரசால் வழங்கப்படும் ‘மது பாபு பென்ஷன் யோஜனா’ ஓய்வூதியத் திட்டத்தில் திருநங்கைகளையும் சேர்ப்பதென்று ஒடிஸா அரசு முடிவு செய்துள்ளது.
Advertisement
எனவே அவர்கள் இதற்காக உள்ள இணையதளம் வழியாகவோ அல்லது விண்ணப்பப் படிவங்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். இதன்மூலம் சுமார் 6,000 திருநங்கைகள் பயன்பெறுவார்கள்.
திருநங்கைகளுக்கு அவர்களது வயதினைப் பொறுத்து ரூபாய் 500 முதல் 900 வரை ஓய்வூதியம் கிடைக்கும்.
2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பிஜூ ஜனதா தளம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இதனை வாக்குறுதியாக அளித்திருந்தது. தற்போது அதனை நடைமுறைப்படுத்துவதற்கு முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.