முகப்பு
இந்தியா

மிசோராமில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவு

மிசோராமின் சம்ப்பை பகுதியில் ஞாயிறன்று ஏற்பட்ட நிலநடுக்கமானது , ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
மிசோராமின் சம்ப்பை பகுதியில் ஞாயிறன்று ஏற்பட்ட நிலநடுக்கமானது , ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது.
பகிர்:

சம்ப்பை: மிசோராமின் சம்ப்பை பகுதியில் ஞாயிறன்று ஏற்பட்ட நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது.

இதுதொடர்பாக தேசிய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ள தகவலில், ‘ ஞாயிறன்று மிசோராமின் சம்ப்பை பகுதியில் இருந்து 25 கிமீ தெற்கு –தென்மேற்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு மாதமாக மிசோராமில் இதேபோலத் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 3- ஆம் தேதியன்று கூட சம்ப்பை பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.