முகப்பு
இந்தியா

அசாமில் இன்று மேலும் 814 பேருக்கு கரோனா

அசாமில் புதிதாக 814 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாக அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 13,336 ஆக உள்ளதாக சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:54 PM
பகிர்:

அசாமில் புதிதாக 814 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாக அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 13,336 ஆக உள்ளதாக சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

தற்போது 4,988 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். மேலும், 8,329 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 16 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,252 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 7,19,665 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 467 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 20,160ஐ எட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.