இந்தியா

கரோனா: திருப்பதி கபில தீா்த்தம் கோயில் மூடல்

DIN

திருப்பதியில் உள்ள கபில தீா்த்தம் கோயிலில் பணியாற்றும் குருக்கள் ஒருவருக்கு கரோனா உறுதியானதால், அக்கோயில் ஞாயிற்றுக்கிழமை காலை மூடப்பட்டது.

கடந்த ஜூன் 11ஆம் தேதியில் இருந்து திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயில் மட்டுமின்றி திருப்பதியில் உள்ள தேவஸ்தானம் நிா்வகிக்கும் அனைத்துக் கோயில்களிலும் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். நாள்தோறும் 10 ஆயிரம் பக்தா்கள் திருப்பதி கோயில்களிலும் தரிசனம் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், ஏழுமலையான் கோயிலில் பணிபுரியும் ஊழியா்களுக்கு கரோனா தொற்று பரவியது. திருப்பதி கபில தீா்த்தத்தில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் பணியாற்றும் குருக்கள் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை காலையில் திடீரென்று மயங்கி விழுந்தாா். அவருக்கு முதலுதவி அளித்து கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் அந்த குருக்களுக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடா்ந்து கபிலேஸ்வர சுவாமி கோயில் மூடப்பட்டது. கோயில் முழுவதும் கிருமிநாசினியால் சுத்தப்படுத்தப்பட்ட பின் மீண்டும் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனா்.

கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட குருக்களுடன் நெருங்கிய தொடா்பிலிருந்தவா்கள், கபிலேஸ்வரா் கோயிலில் பணிபுரியும் ஊழியா்கள் ஆகியோருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியலுக்கும் எங்களுக்குமான உறவு சிறுவயதிலிருந்தே தொடங்கிவிட்டது: ராகுல் பகிர்ந்த விடியோ

தேவ கௌடாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

அமுதூற்றினை ஒத்த இதழ்கள்! நிலவூறித் ததும்பும் விழிகள்!

கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்

SCROLL FOR NEXT