ஒடிசாவில் 16 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு: 83 பேர் பலி
ஒடிசாவில் கரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 16,000-ஐ தாண்டியுள்ளது. மேலும், பலியானோர் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.
ஒடிசாவில் கரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 16,000-ஐ தாண்டியுள்ளது. மேலும், பலியானோர் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் 718 பேருக்கு புதிதாகத் தொற்று பாதித்துள்ள நிலையில், மாநிலத்தில் தொற்று எண்ணிக்கை 16,110 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கஞ்சம் மாவட்டத்திலிருந்து இரண்டு உயிரிழப்புகள், கஜாபதி மற்றும் அங்குல் மாவட்டத்தைச் சேர்ந்த தலா ஒருவர் பலியாகியுள்ள நிலையில் 83 பேர் இதுவரை தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.