கரோனா தொற்று ஒரு கிளஸ்டரிலிருந்து இன்னொரு கிளஸ்டருக்குப் பரவுவதைத் தடுக்க கேரள அரசு முயற்சித்து வருவதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்துள்ளார். 
இந்தியா

கேரள அரசு சமூகப் பரவலைத் தடுக்கும்: கே.கே. ஷைலஜா

கரோனா தொற்று ஒரு கிளஸ்டரிலிருந்து இன்னொரு கிளஸ்டருக்குப் பரவுவதைத் தடுக்க கேரள அரசு முயற்சித்து வருவதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்துள்ளார்.

DIN

கரோனா தொற்று ஒரு கிளஸ்டரிலிருந்து இன்னொரு கிளஸ்டருக்குப் பரவுவதைத் தடுக்க கேரள அரசு முயற்சித்து வருவதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் இன்று (சனிக்கிழமை) தெரிவித்ததாவது:

"ஒரு கிளஸ்டரிலிருந்து இன்னொரு கிளஸ்டருக்குப் பரவுவதைத் தடுக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம். கடலோரப் பகுதிகளுக்கு கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. இன்றைய தேதியில் கேரளத்தில் 84 கிளஸ்டர்கள் உள்ளன. கிளஸ்டர்கள் வட்டத்துக்குள் கரோனா பரவல் 50 சதவிகிதத்துக்கும் மேல் உள்ளது. ஆனால், கிளஸ்டர்கள் வட்டத்துக்கு வெளியே 10 சதவிகிதத்துக்கும் குறைவாகவே கரோனா பரவல் உள்ளது. கிளஸ்டர்கள் உருவாவதையும், சமூகப் பரவலையும் கேரள அரசு தடுக்கும்." என்றார் ஷைலஜா.

முன்னதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் இதுபற்றி வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

"திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள சில கடலோரப் பகுதிகளில் நிலைமை தீவிரமாக உள்ளது. அங்கு கரோனா தொற்று மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தப் பகுதிகளில் அதிகளவில் பாதிக்கப்படுவது, கரோனா பரவலை வெளிப்படுத்துகிறது. இந்தப் பகுதிகளில் சமூகப் பரவல் உள்ளது என்று கூறலாம். இந்த நிலைமையை எதிர்கொள்ள அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது." என்றார் பினராயி விஜயன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT