ஒடிசாவில் ஒரே நாளில் 6 பேர் பலி: புதிதாக 673 பேருக்கு கரோனா தொற்று
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 673 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், ஆறு பேர் பலியாகியுள்ளதாக அந்த நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 673 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், ஆறு பேர் பலியாகியுள்ளதாக அந்த நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அந்த மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,110 ஆக உயர்ந்துள்ளது என்று ஒடிசாவின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
இதில், 5,533 பேர் தற்போது மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். மேலும், 12,452 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 97 பேர் வைரஸ் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.