லால்ஜி டாண்டன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
மத்தியப்பிரதேச மாநிலத்தின் ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியாலால்ஜி டாண்டன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
மத்தியப்பிரதேச மாநிலத்தின் ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுதில்லி: மத்தியப்பிரதேச மாநிலத்தின் ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி பகிர்ந்துள்ள சுட்டுரைப் பதிவில், “அரசியல் அமைப்புச் சட்டம் தொடர்பான விவகாரங்களை நன்கறிந்தவர் டாண்டன்” என்று தெரிவித்துள்ளார்.
“சமுதாயத்துக்கு அயராது உழைத்த லால்ஜி டாண்டன், அவரது அரும்பணிகளுக்காக நினைவுகூரப்படுவார். சிறந்த நிர்வாகியாக விளங்கிய அவர், பொது நலத்திற்கு எப்பொழுதும் முக்கியத்துவம் அளித்தார். அவரது மறைவால் துயருற்றேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாயுடனான டாண்டனின் நீண்டகால நட்புறவையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.