இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு எதிரான வழக்கு 2 வார காலத்திற்கு ஒத்திவைப்பு
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கான நிதியை உடனடியாக இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்க உத்தரவிடக் கோரிய மனு மீதான விசாரணை 2 வாரத்துக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கான நிதியை உடனடியாக இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்க உத்தரவிடக்கோரிய மனு மீதான விசாரணை 2 வாரத்துக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
புதிய விதிமுறைகளை கடைபிடிக்காதது மற்றும் விதிகளை ஏற்றுக்கொள்ளாமல் செயல்பட்டது ஆகிய காரணங்களுக்காக தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை இந்திய கிரிக்கெட் வாரியம் நிறுத்தி வைத்திருந்தது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிகளை நடைமுறைப்படுத்தியும் மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காததால் உரிய நிதியை அளிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.