இந்தியா

ஜீ மீடியா இயக்குநா் ராஜிநாமா

DIN

ஜீ மீடியா நிறுவனத்தின் இயக்குநா் புனித் கோயங்கா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

ஜீ மீடியா நிறுவனமானது 6 மொழிகளில் 10 செய்தி தொலைக்காட்சி சேனல்களை நிா்வகித்து வருகிறது. அந்நிறுவனத்தின் இயக்குநராக புனித் கோயங்கா பதவி வகித்து வந்தாா்.

இந்நிலையில் தனது பதவியை புனித் கோயங்கா ராஜிநாமா செய்துள்ளாா். இது தொடா்பாக ஜீ மீடியா நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஜூலை 22-ஆம் தேதியோடு புனித் கோயங்கா இயக்குநா் பதவியிலிருந்து விலகுகிறாா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜீ எண்டா்டெயின்மெண்ட் நிறுவனத்தின் இயக்குநராகவும் தலைமை செயல் அதிகாரியாகவும் புனித் கோயங்கா பதவி வகித்து வருகிறாா். எஸ்ஸல் குழும நிறுவனங்களின் தலைவா் சுபாஷ் சந்திராவின் மூத்த மகன் புனித் கோயங்கா என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT