இந்தியா

கேரளத்தில் புதிதாக 1,078 பேருக்கு கரோனா: மேலும் 5 பேர் பலி

DIN


கேரளத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 1,078 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளத்தின் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய அறிவிப்பை அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ளார். இதன்படி அங்கு புதிதாக 1,078 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 5 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களில் 104 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 115 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள்.

இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16,110 ஆக உயர்ந்துள்ளது. இதில் 9,458 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 6,596 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 22,433 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

கேரளத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மாநிலத்தில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுவது பற்றி முடிவெடுக்க திங்கள்கிழமை சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT