முகப்பு
இந்தியா

ஒடிசாவில் 21 ஆயிரத்தைத் தாண்டியது பாதிப்பு: ஒரே நாளில் 1,264 பேருக்குத் தொற்று

ஒடிசாவில் ஒரே நாளில் 1,264 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:59 PM
1,264 more COVID-19 cases in Odisha
பகிர்:

ஒடிசாவில் ஒரே நாளில் 1,264 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

ஒடிசாவில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றுக் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஒரே நாளில் 1,264 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், ஒடிசாவில் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 21,099 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், 440 பேர் நோயிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை 13,749 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று பாதிக்கப்பட்ட 7,025 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,720 பேர் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 12 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும் 1,129 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.