முகப்பு
இந்தியா

நொய்டாவில் கட்டடத்திலிருந்து தவறிவிழுந்து தொழிலாளியின் 4 வயது மகன் பலி

கிரேட்டர் நொய்டாவில் புதிதாகக் கட்டப்படும் கட்டுமானத்தில் நான்காவது மாடியிலிருந்து சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:59 PM
பகிர்:

கிரேட்டர் நொய்டாவில் புதிதாகக் கட்டப்படும் கட்டுமானத்தில் நான்காவது மாடியிலிருந்து சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நொய்டாவில்  உள்ள பிஸ்ராக் காவல் நிலையப் பகுதியில் புதிய கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகின்றது. அந்த கட்டடத்தில் தம்பதியர் இருவரும் தொழிலாளர்களாக பணியாற்றி வரும் நிலையில், தனது நான்கு வயது மகனுடன் பணிக்கு வந்துள்ளனர். 

இந்நிலையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் நான்காவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளான். 

சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக அவரின் பெற்றோர்கள் இதுவரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என்று கூடுதல் டிசிபி அங்கூர் அகர்வால் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.