இந்தியா

ஜார்க்கண்டில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம், 2 ஆண்டுகள் சிறை

DIN

பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்குவதற்கான சட்டத்திற்கு ஜார்க்கண்ட் மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

கரோனாவிலிருந்து தப்பிக்க சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது, அடிக்கடி கைகளை கழுவுவது மற்றும் முகக்கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் மாநில அரசு  முகக்கவசம் அணியாமல் இருப்பது, பொது இடங்களில் எச்சில் துப்புவது போன்ற குற்றங்களுக்காக ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் மற்றும் 2 வருட சிறைத் தண்டனை விதிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போதைய நிலவரப்படி 6485 பேர் கரோனா பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT