இந்தியா

விரைவில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தேர்தல் ஆணையம் தகவல்

DIN

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. 

நாட்டில் பிகார், உத்தரப் பிரதேசம், கேரளம், அசாம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. தற்போது கரோனா பரவும் சூழ்நிலையில் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி வரை ஏற்கெனவே திட்டமிட்டிருந்த தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் நேற்று தகவல் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், இன்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இதையடுத்து, விரைவில் காலியாக உள்ள சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என செய்தித் தொடர்பாளர் ஷேபள்ளி சரண் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும், இடைத்தேர்தலுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தைப் பொருத்தவரையில் தற்போது திருவொற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய மூன்று தொகுதிகள் காலியாக உள்ளன. இதில், திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய தொகுதிகளுக்கு 6 மாத கால அவகாசம் என்ற விதிமுறைகளின்படி, ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தேர்தல் நடத்தப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

ஏதென்ஸ் நகரில் சமந்தா!

SCROLL FOR NEXT