ஆகஸ்ட் 31 வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது: சிக்கிம் மாநில அரசு அறிவிப்பு
கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையின் பகுதியாக சிக்கிம் மாநிலத்தில் ஆகஸ்ட் 31 வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையின் பகுதியாக சிக்கிம் மாநிலத்தில் ஆகஸ்ட் 31 வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் சிக்கிம் மாநிலத்தில் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டது. இதனால் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இணையவழியில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சிக்கிம் மாநில கல்வி அமைச்சர் குங்கா நிமா லெப்சா, கரோனா பரவலை தடுக்கும் வகையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது என அறிவித்துள்ளார்.
மேலும், கரோனா பரவல் நிலைமையைப் பொறுத்து இந்த முடக்கம் மேலும் நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து, கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைய வழி கற்றல் முறைகளை தொடருமாறு கல்வி அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உள்ளூர் தொலைக்காட்சி சேனலான 'சம்வாட்' மற்றும் அகில இந்திய வானொலி வழியாக நடத்தப்படும் வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.