2020 ஆண்டில் 179 தொழிற்கல்வி நிலையங்கள் மூடல்: ஏஐசிடிஇ 
இந்தியா

2020 ஆண்டில் 179 தொழிற்கல்வி நிலையங்கள் மூடல்: ஏஐசிடிஇ

நாட்டில் பொறியியல் கல்லூரிகள் உள்பட சுமார் 180 தொழிற்கல்வி நிலையங்கள் 2020 - 21ஆம் கல்வியாண்டில் மூடப்படுவதாக அனைத்திந்திய தொழிற்கல்வி வாரியம் (ஏஐசிடிஇ) தெரிவித்துள்ளது.

PTI


புது தில்லி: நாட்டில் பொறியியல் கல்லூரிகள் உள்பட சுமார் 180 தொழிற்கல்வி நிலையங்கள் 2020 - 21ஆம் கல்வியாண்டில் மூடப்படுவதாக அனைத்திந்திய தொழிற்கல்வி வாரியம் (ஏஐசிடிஇ) தெரிவித்துள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் இது மிகப்பெரிய எண்ணிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 179 கல்விநிலையங்களில் 134 கல்வி நிலையங்கள் தொடர்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக போதுமான மாணவர் சேர்க்கையை பெறாததால், இந்த கல்வியாண்டில் நீட்டிப்புக் கோரி விண்ணப்பிக்கவே இல்லை.

மேலும் 44 கல்வி நிலையங்கள், உரிமம் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாததால், உரிமம் மறுக்கப்பட்டுள்ளது.

2019 - 20ஆம் கல்வியாண்டில் நாடு முழுவதும் 92 தொழிற்கல்வி நிலையங்கள் மூடப்பட்டன, இதுவே 2018 - 19ல் 89, 2017 - 18ல் 134 ஆகவும், 2016-17ம் ஆண்டில் 163 கல்வி நிலையங்களும், 2015-16 ஆம் ஆண்டில் 126ம், 2014-15ல், 77 கல்வி நிலையங்களும் மூடப்பட்டன.

தற்போது உரிமத்தை புதுப்பிப்பதற்காக விண்ணப்பிக்காத கல்விநிலையங்கள், முதலாம் ஆண்டில் மாணவர் சேர்க்கை நடத்தமாட்டார்கள். ஏற்கனவே படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 ஐபிஎல் எப்போது? ஏலத்துக்கு முன்பே வெளியான நற்செய்தி!

தூத்துக்குடி முதல் சென்னை வரை.. கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

விஜய் கூட்டத்துக்கு பாஸ் தேவையில்லை; அனைவரும் வரலாம்! செங்கோட்டையன்

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

2025-இன் சிறந்த வீராங்கனை: 25 ஆண்டுகால சாதனை பட்டியலில் இடம்பிடித்த சபலென்கா!

SCROLL FOR NEXT