தெலங்கானாவில் 65% கரோனா நோயாளிகள் 21 - 50 வயதுக்குட்பட்டவர்கள்
தெலங்கானாவில் கரோனா தொற்றுக்கு உள்ளானவக்ரளில் 65% கரோனா நோயாளிகள் 21 - 50 வயதுக்குட்பட்டவர்கள் என்று மாநில அரசு வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்: தெலங்கானாவில் கரோனா தொற்றுக்கு உள்ளானவக்ரளில் 65% கரோனா நோயாளிகள் 21 - 50 வயதுக்குட்பட்டவர்கள் என்று மாநில அரசு வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 65.7% பேர் 21 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், 50 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருப்பதாகவும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 10 வயதுக்குக் குறைவானவர்களுக்கும் தான் கரோனாவின் தாக்கம் கடுமையாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த 65 சதவீதம் பேரில் 21 - 40 வயதுக்குட்பட்டவர்களே 47 சதவீதம் பேர் என்றும், 41 - 50 வயதுக்குட்பட்டவர்கள் 18% பேர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்த தகவல், தெலங்கான உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு தாக்கல் செய்த விளக்கமான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இளைய வயதினரும் கரோனா பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு அதிகம் இருப்பது குறித்து மாநில அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.