இந்தியா

பாகிஸ்தானில் மேலும் 1,063 பேருக்கு தொற்று; பாதிப்பு 2,76,288 ஆக அதிகரிப்பு

DIN

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 1,063 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 2,76,288 ஆக அதிகரித்துள்ளது. 

பாகிஸ்தானில் இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,063 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,76,288 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 27 பேர் உயிரிழந்ததை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,892 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று இதுவரை 2,44,883 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 1,179 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 

மொத்த பாதிப்பில் சிந்து மாகாணத்தில் - 1,19,398, பஞ்சாப் - 92,452, கைபர்-பக்துன்க்வா- 33,724, இஸ்லாமாபாத் - 14,963, பலுசிஸ்தான்- 11,654, கில்கித்-பல்திஸ்தான்- 2,042 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 2,055 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 21,256 உள்பட இதுவரை 19,31,102 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களில் முதல்முறையாக நேற்று ஒருநாள் பாதிப்பு 1000-க்கும் கீழ் குறைந்து பதிவானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT