இந்தியா

புதியக் கல்விக் கொள்கைக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வரவேற்பு

DIN

மத்திய அரசின் சார்பில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள புதியக் கல்விக் கொள்கைக்கு தெலுங்கு தேச கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

34 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை உள்ளடக்கிய புதியக் கல்விக் கொள்கைக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.

புதியக் கல்விக்கொள்கைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவும், எதிர்ப்பும் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடு, “உலக அளவிலான போட்டிக்கு ஈடுகொடுக்க இந்திய இளைஞர்களுக்கு புதியக்கல்விக் கொள்கை உதவியாக இருக்கும்.” என்றார்.

மேலும், “ பிரதமர் மோடி தலைமையிலான இந்த நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். நாட்டின் கல்வித்துறை வளர்ச்சிக்கு இது ஊக்கம் தருவதாக உள்ளது.” என்றார்.

புதியக்கல்விக் கொள்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 5ஆம் வகுப்பு வரையிலான தாய் மொழிக்கல்வியை சந்திரபாபு நாயுடு வரவேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT