கணவரை தோளில் சுமந்த மனைவி: மத்தியப் பிரதேச பஞ்சாயத்து வழங்கிய தண்டனை
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபுவா பகுதியில், தகாத உறவு வைத்திருந்த மனைவி, தனது கணவரை தோளில் தூக்கி சுமக்கும்படி கிராம பஞ்சாயத்தில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜபுவா: மத்தியப் பிரதேச மாநிலம் ஜபுவா பகுதியில், தகாத உறவு வைத்திருந்த மனைவி, தனது கணவரை தோளில் தூக்கி சுமக்கும்படி கிராம பஞ்சாயத்தில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கணவரை தோளில் தூக்கிக் கொண்டு அவரது மனைவி கிராமம் முழுவதையும் சுற்றி வரும் விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்த சம்பவத்தில், கணவர், தனது மனைவிக்கு வேறொரு நபருடன் உறவு இருப்பதாக பஞ்சாயத்தில் புகார் கொடுத்துள்ளார். இருவரையும் அழைத்து விசாரித்த பஞ்சாயத்து, கணவரை தோளில் தூக்கிக் கொண்டு கிராமம் முழுவதையும் சுற்றி வருமாறு உத்தரவிட்டனர்.
Advertisement
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஏழு பேர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.