முகப்பு
இந்தியா

மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் மரணம்

உடல்நலக் குறைவு காரணமாக மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா இன்று காலமானார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:02 PM
somen mitra
பகிர்:

உடல்நலக் குறைவு காரணமாக மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா இன்று காலமானார். 

மேற்குவங்க மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சோமன் மித்ரா (வயது 78). இவர், கடந்த சில தினங்களுக்கு முன் சிறுநீரக கோளாறு மற்றும் இதய பாதிப்பு காரணமாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை 1.30 மணியளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது. மறைந்த சோமன் மித்ராவுக்கு மனைவி மற்றும் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். 1960-களில் மாணவர் அணி தலைவராக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய மித்ரா, பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோமன் மித்ரா மறைவுக்கு மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தாங்கர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →