இந்தியா

லக்னோவில் செல்போன் பயன்படுத்திக் கொண்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் 

DIN

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் செல்போன் பயன்படுத்திக் கொண்டே வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநில போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

வாகனம் இயக்கும் போது செல்போன் பயன்படுத்துவதனால் சாலை விபத்துகள் அதிகம் ஏற்படுகிறது எனச் சுட்டிக்காட்டிய மாநில அரசு புதிய அபராத முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

முதல்முறை தவறிழைத்தால் ரூ.1000 அபராதமும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தவறிழைத்தால் ரூ.10 ஆயிரம் வரையிலும் அபராதம் விதிக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் தலைக்கவசம் இல்லாமல் வாகனம் இயக்குவது அபராதத்திற்குரிய குற்றமாக கருதப்பட்டு ரு.1000 வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சாலை அபராதங்கள் மத்திய அரசின் சமீபத்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி வரையறுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT